உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது ஆர்ஜென்டினா !
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில் இதில் ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி 3ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெசி அழகான கோலாக மாற்றினார்.
ஆர்ஜென்டினாவின் மரியா 36ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பெற்று முதல் பாதியிலேயே ஆர்ஜென்டினா ஆதிக்கம் பெற்றது.
பின்னர் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé 80 மற்றும் 81ஆவது நிமிடங்களில் அபாரமான இரு கோல்களைப் பெற்று மீண்டும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.
இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்களைப் பெற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
இதில், ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெசி 108ஆவது நிமிடத்தில் அபாரமாக கோல் ஒன்றைப் பெற்றதோடு,பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 118ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலமாக கோல் ஒன்றைப் பெற்று மீண்டும் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
இதனையடுத்து, போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதற்காக இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.
கருத்துரையிடுக