இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தாயாரின் மறைவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்திருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பிரதமா் மோடி நேற்று தாயாரை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
கருத்துரையிடுக