திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
திருகோணமலை திருக்கடலூர்,சல்லி,சாம்பல் தீவு,மற்றும் குச்சவெளி போன்ற பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்து.
கடல் அலைகள் தற்போது கொந்தலிப்பாக காணப்படுவதோடு பாரிய இறைச்சலுடன் கடல் நீர் காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாது வீடுகளில் இருப்பதோடு மீனவர்களின் படகுகள் கடல் அலைகளினால் இலுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையோரங்களில் அமைந்துள்ள வீடுகளில் உள்ளோர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
தற்போது இம்மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதோடு குளிர் காற்றும் வீசிவருகின்றது.
கருத்துரையிடுக