எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெவ்வையின் தலைமையில் தனித்து சுயாதீன குழு ஊடாக தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை செய்வதாக தனது முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது,
"எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அஸ்பர் உதுமாலெப்பை தலைமையில் சுயாதீன குழுவாக இயங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கான ஆதரவு மற்றும் ஆலோசனைகளை எமது ஊரின் கல்விமான்கள், புத்திஜிவிகள் , மதிப்புக்குரிய உலமாக்கள், சமூக சேவை அமைப்புக்களிடமிருந்து ஆலோசனை பெற்று வருகின்றார்.
அணுகுமுறைகள், விடாப்பிடி, தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல், மனஉறுதி, எவ்விடயத்தையும் முன் கொண்டு செல்லும் ஆளுமை, கம்பீரமான பேச்சு, காலத்துக்கு பொருத்தமான அபிவிருத்தியினை செய்யும் திறன், எந்த அரசாங்கம் அமைத்தாலும் அதனோடு இணைந்து கைகோர்த்து நமது ஊருக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் சாமத்தியம்,
என்னுடைய ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டு என்ற ஊர்பற்று மற்றும் இறைவன்மீதுள்ள அசையாத நம்பிக்கை, இறை பக்தி, இதுபோன்ற விடயங்களைப் பார்க்கும் போது, இன்ஷா அல்லஹ் இறைவனின் உதவியுடன் சம்மாந்துறை உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தை இம்முறை கைப்பற்ற எதிர்பார்க்கிறோம்." - என குறிப்பிட்டள்ளதுடன்,
கருத்துரையிடுக