மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹீம் தலைமையில் அந்த நாட்டில் கூட்டு அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசில் நிதியமைச்சராகவும், பிரதமர் அன்வர் இப்ராஹீம் பதவியேற்றுள்ளார்.
தேசிய முன்னணி மற்றும் ஐ.பி.எல். கட்சியுடன் இணைந்தே ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதிப் பிரதமர்களாக அஹமட் ஸஹீதும், திருமதி பஸீலா யூசுப்பும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரது கட்சியும் இணைந்தே புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள். கடந்த பொதுத் தேர்தலில் அன்வர் இப்ராஹீமுக்கு அரிதிப் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து கூட்டு அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது.
28 பேரைக் கொண்ட அமைச்சரவையில் 4 பேர் செனட் சபை மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக பிரதமர் பதவியேற்க எதிர்பார்த்திருந்த அன்வர் இப்றாஹீமுக்கு இம்முறையே பிரதமர் பதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக