SL vs AFG ஒருநாள் சர்வதேச இறுதி போட்டி இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் இலங்கை அணியை தோல்வியடையச்செய்தது.
அத்துடன், கண்டி பல்லேகலை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 1 - 0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
கருத்துரையிடுக