FIFA கால்பந்து உலக கோப்பை 2022: வெளியான பல முக்கிய தகவல்கள்

FIFA கால்பந்து உலக கோப்பை 2022: வெளியான பல முக்கிய தகவல்கள்

2 ஆவது கால்பந்து உலக கோப்பை தொடர் மிக பிரம்மண்டமாக நடத்த இருக்கும் கட்டார் உலகில் மிக சரித்திரமிக்க வரலாற்று சாதனைகளை தன்வசமாக்கியுள்ளது.

ஆசியாவில் கிரிக்கெட்டுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறதோ அதை விட அதிகமாகவே உலக அளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கால்பந்து கொண்டுள்ளது.

இந்த ரசிகர்களை உலக அளவில் கொண்டாடும் விதமாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை FIFA எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் காற்பந்து உலக கோப்பை நடத்தப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையில் பிரான்ஸ் சாம்பியன்ஸ் பட்டத்தை தன் வசமாக்கியது. இதை தொடர்ந்து இம்முறை நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அதாவது நாளைய தினம் கால்பந்து திருவிழா கோலாகலமாக கட்டாரில் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் கட்டார் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை தன் வசமாக்கியுள்ளது.

இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடக கட்டார் தனது பெயரை பதிவு செய்துள்ளது. நடத்தும் நாடு என்னும் பெருமையை கட்டார் பதிவு செய்துள்ளது.

வழமையாக உலக கோப்பை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்படும். ஆனால் இம்முறை நவம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 45 முதல் 50 செல்சியஸ் அளவிலான கடும் வெப்பம் கட்டாரில் நிலவியதான் காரணமாக உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே தற்போது குளிர் காலத்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  முதல் முதலில் குளிர் காலத்தில் உலக கோப்பையை நடத்தும் நாடாக கட்டார் தன்னை பதிவு செய்துள்ளது. நவம்பர் 20 ஆம் திகதி முதல் December 18 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக 32 அணிகள் பங்குபற்றும் நிலையில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன.

60 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் அல்-பய்ட் (Al-Bayt) மைதானத்தில் கால்பந்து உலக கோப்பையின் தொடக்க ஆட்டம் நடைபெறவுள்ளது.

இறுதி போட்டியானது 80 ஆயிரம் ரசிகர்கள் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் லுஸைல் (Lusail) மைதானத்தில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதுவே கட்டார் நாட்டில் அமைக்க பட்டிருக்கும் மிக பெரிய கால்பந்து மைதானம் ஆகும்.  உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் 1.லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)

2.அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)

3.ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)

4.கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)

5.எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

6.அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

7.அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

8.அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

2022 FIFA உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள நாடுகள் and drew 32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.8 குழுக்கள்

குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ்

குழு C: அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து  

குழு D: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா

குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்

குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா

குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 

இப் போட்டிகளை பார்ப்பதற்கு என உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.

கருத்துகள்