வாகன பதிவுக் கட்டணம் அதிகரிப்பு- புதிய கட்டண விபரம் இதோ!

மோட்டார் வாகன பதிவு கட்டணங்களை நாளை (18) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2000 ரூபா எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு 3000 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பதிவு செய்வதற்கு 4000 ரூபா அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாமதமாகி பதிவு செய்வதற்கான கட்டணங்களும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனங்களுக்கான தாமத கட்டணம் 100 ரூபாவாகவும், மோட்டார் சைக்கிளுக்கான தாமத கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.