தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது
கருத்துரையிடுக