எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ வெளியிட்ட தகவல்

தற்பொழுது தொழிற்சாலைகள் மற்றும் விருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றும் மற்றும் நாளையும்  40,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வியாழக்கிழமை முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்.

கடந்த காலங்களில் சமையல் எரிவாயுவின் கேள்வி, குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்திருந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் பண்டிகை காலம் வருவதன் காரணமாக, மீண்டும் சமையல் எரிவாயுக்கான கேள்வி அதிகரித்திருப்பதுடன், கையிருப்பில் உள்ள எரிவாயு கொள்கலன்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.