நிலவு வட்டப் பாதையில் நாசா கலம்

நிலவு வட்டப் பாதையில் நாசா கலம்

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், நிலவின் தொலைதூர சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இயந்திரங்களை இயக்கியதன் மூலம் அந்தப் பகுதிக்கு விண்கலம் வெள்ளிக்கிழமை திருப்பப்பட்டது.

‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஓகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ரொக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் இயந்திர கோளாறு காரணமாக அந்த திட்டம் தாமதமாக செயல்படுத்தப்பட்டது.

கருத்துகள்