நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில்  குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்

இவ்வாறு உயிரிழந்தவர் கெல்சி தோட்டத்தை சேர்ந்த டோம்னிக் அனுசன் எனவும்  இவர் 22 வயதான ஒரு வயதும் ஆறுமாத பெண்  பிள்ளையின் தந்தை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இன்று காலை பாடசாலை செல்லும்  மாணவர்கள் கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ்சார் மேலும் தெரிவித்தனர் 

கெல்சி தோட்டத்தில் இருந்து டெஸ்போட் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமல் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

(டி.சந்ரு தி.தர்வினேஷ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.