நோயாளிக்கு நோய்களை கூறும் ஜனாதிபதி ரணில் அதற்கான மருந்துகளை கூற மறந்துவிட்டார் - இம்ரான் மகரூப் எம்.பி

நோயாளிக்கு நோய்களை கூறும் ஜனாதிபதி ரணில் அதற்கான மருந்துகளை கூற மறந்துவிட்டார் - இம்ரான் மகரூப் எம்.பி

எமது நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகளை பார்க்கின்ற போது இது கனவா? அல்லது நனவா? என்ற சந்தேகம் உருவாகிறது ஏனென்றால் இந்த பாராளுமன்றில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நல்லாட்சி காலத்தில் விமர்சித்தவர்கள் இன்று அவரை புகழ்ந்து கொண்டிருப்பதையும், அவருடைய வரவு செலவு திட்டத்தை மிகவும் வரவேற்கும் நிலைப்பாட்டில் பேசுகின்றதையும் பார்க்கின்ற போது இந்த சந்தேகம்  வருவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை பார்க்கின்ற போதுநோயாளிக்கு நோய்களை கூறும் ஜனாதிபதி ரணில் அதற்கான மருந்துகளை கூற மறந்துவிட்ட நிலை காணப்படுவதாக வரவு-செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது பா.உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இப்படியான பல வரவு செலவு திட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், அதேபோன்று இது நடைமுறைக்கு சாத்தியமா என்பதையும் கேட்க விரும்புகிறோம். ஜனாதிபதி வாசித்த இந்த அறிக்கை ஜோசியக்காரன் சொல்வது போன்று அல்லது வானிலை அறிக்கை போன்றே காணப்பட்டதே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்குமா என்பது கேள்வியாகவே காணப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி ரணிவ் விக்ரமசிங்க அவர்கள் திறந்த பொருளாதார கொள்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளவர் ஆனால் அரசாங்கத்தில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்க்கும் நிலைப்பாட்டில் காணப்படுகிறார்கள். அவ்வாறு இருக்க இவர்களால் ஒன்றாக இணைந்து இந்த பயணத்தை எடுத்துச்செல்ல முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் படி அந்த நிதியாண்டுக்கான பற்றாக்குறை ரூபா. 2404 பில்லியன், மொத்த செலவு சுமார் ரூபா. 5819 பில்லியன் ஆகும் , எமது நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?  எனவும், பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அமைச்சுக்களுக்கு போதுமான நிதிகள் ஒதுக்கப்படவில்லை எனவும் விமர்சனங்களை முன்வைத்தார்.

கருத்துகள்