இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு
முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது!
- சூரா கவுன்ஸில் மாநாட்டில் எம்.எம். சுஹைர் தெரிவிப்பு!
முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை நாட்டில் பற்றுடன் செயல்பட்டு வருகின்றனர் வந்துள்ளனர் தேவநம்பியதீச மன்னரின் காலத்தில் முஸ்லிம்கள் விவசாயத்திற்கு குளங்கள் கட்டுவதற்கு உதவியதாக வரலாற்று ஆசிரியர் கலாநிதி தேவராஜா அவர்கள் அவரது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்கள் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டுக்கு நிறைய பங்களிப்பு செய்த சமூகமாக காணப்படுகின்றது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்
ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் இன்று (27) கொழும்பு அல்ஹிதயா கல்லூரி பஹார்டீன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ முஸ்லிம்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் இந்த நாட்டிலே பிரிப்பதற்கு தாயாரான சமூகமாக முஸ்லிம்கள் இருக்கவில்லை என்ற காரணத்தினால் பின்னர் நீக்கப்பட்டார்கள், முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டார்கள், காத்தான்குடி பள்ளிவாயலில் ஒரே இரவில் 147 பேர் கொல்லப்பட்டார்கள், கிழக்கில் எண்ணிக்கையற்ற முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்கள்
1956இல் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஒரு தமிழ் குடும்பத்தை ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தோம் முஸ்லிம்கள் மக்களுக்கும் மற்றும் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களை பாதுகாத்தார்கள்
1978 ஜேஆர் ஜெயவர்தன அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் 1979இல் வடக்கிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்தார் இதன் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள் இந்த சட்டம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக 30 வருட கால யுத்தத்திற்கு காரணமாக இருந்தது
இது நாட்டை பாதாளத்தில் தள்ளியது இதற்கு ஆரம்பத்த்தில் இருந்தவர்களும் இறுதியாக இருந்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் அவர்கள் அன்று சிந்த்தித்து செயல்பட்டிருந்தால் இன்று பிச்சை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
நாட்டில் மக்களுடைய கடமை என்ன ,ஆட்சியாளர்களின் கடமை என்ன பொறுப்பு என்ன எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சிந்திப்பது அவசியம், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகள் அணுகப்பட்டிருந்தால் பிச்சை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
(ராபி சிஹாப்தீன்)
கருத்துரையிடுக