அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. அதை ஜப்பான் உறுதி செய்துள்ளது.
வடகொரியா இதுவரை குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இந்த புதிய சோதனையின் மூலம் வடகொரியாவும் நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன. இந்த நீண்ட தூர ஏவுகணை சோதனை அமெரிக்காவை நேரடியாக பாதிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் ராணுவ சக்திக்கு சவால் விடும் வகையில், வடகொரியா கடந்த காலத்தில் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை கருத்திற் கொண்டு மூன்று நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக