வவுனியாவிற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி மாவட்ட செயலகத்திற்கு அதிகாரிகளை சந்திக்க வருவதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூட முற்பட்ட நிலையில் அவர்களை குறித்த பகுதிக்கு செல்ல விடாது பொலிஸார் தடுத்திருந்தனர்.

இதையடுத்து அங்கு ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அவ்விடத்திலேயே நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறியதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை மாவட்ட செயலகத்தின் நுழைவாயில் சென்றடைய பொலிஸார் அனுமதித்தனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.