க்ளைபோசேட் மீதான தடையை நீக்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்தில் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர க்ளைபோசேட் தடையை தொடர வேண்டுமா, இல்லையா என விவசாயப் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமும் கருத்துக்களை கேட்ட பின்னரே க்ளைபோசேட் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கையில் களைகளை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்தாமல் க்ளைபோசேட் தடைசெய்யப்பட்டது. 

இதையடுத்து, 2018இல் தேயிலை மற்றும் ரப்பரில் க்ளைபோசேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.