பெய்லர் பாலம் அமைப்பதற்காக காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

அதேநேரம் காலி வீதி மூடப்படுவது தொடர்பான விபரங்கள் மற்றும் மாற்று வழிப்பாதைகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனச் சாரதிகளுக்கு அறிவிக்கவுள்ளது.

காலி வீதியின் மக்கொன ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளமையினால் அதனை புனர்நிர்மாணம் செய்வதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நீண்ட காலமாகியும் பாலம் திருத்தப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜத் அவர்கள் இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் தற்போதுள்ள சேதமடைந்த பாலத்தை அகற்றி அதற்குப் பதிலாக தற்காலிகமாக பெய்லர் பாலம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெய்லர் பாலம் அமைப்பதற்கு காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகாரி சபை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், அம்ஜாத் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.