2022 ற்கான O/L பரீட்சைகள் ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே! - கல்வி அமைச்சர்

2022 ற்கான O/L பரீட்சைகள் ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே! - கல்வி அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

O/L பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், மேலும் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை என்றார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை,

புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள்