ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்துமாறு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு அவரும் காரணமாக இருப்பதால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் இன்று மாலை இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கான அவசர கூட்டத்தில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யாவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்துள்ளார். (Siyane News)
கருத்துரையிடுக