பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ரயில் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் பாணந்துறை புகையிரத நிலைய அதிபர் அலுவலகம் மீது நேற்று மாலை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் புகையிரத நிலைய அதிபர் அலுவலகம் சேதமடைந்துள்ளதுடன், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு விரைவு ரயில்கள் மாத்தறை மற்றும் காலி நோக்கி பயணித்த நிலையில் பாணந்துறை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தாது சென்றது தொடர்பில் பயணிகள் கேள்வி எழுப்பிய போதே அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோபமடைந்த பயணிகள் புகையிரத நிலைய அதிபர் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Irumbuthirai News
கருத்துரையிடுக