எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(11) விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழுப் பணம் கடந்த வெள்ளிக்கிழமை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் செலுத்தப்பட்டதாகவும், டீசல் கப்பல் இம்மாதம் 15 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 22-24 ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பல் வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்ட டீசல் கப்பல் இம்மாதம் 15-17 ஆம் திகதிகளில் வரும் எனவும், அதற்கான எஞ்சிய பணம் இன்று செலுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்பணம் செலுத்தப்பட்ட பெற்றோல் கப்பல் இம்மாதம் 17-19 ஆம் திகதிகளில் வந்து சேரும் எனவும், அதற்கான மீதிப் பணம் நாளை செலுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு டீசல் கப்பலானது 15-17 ஆம் திகதியும், மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் 14-16 மற்றும் 15-17 ஆம் திகதிகளிலும் இலங்கைக்கு வரவுள்ளன.
இம்மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக எரிபொருளை ஏற்ற முடியாமல் போனதால் இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக