நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு உள்ளது.
அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என்றும் மத்துமபண்டார குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக