அனைத்து நோயாளர்களுக்கும் அரச மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவிப்பு

 



ஜூலை (09) இன்று அரச வைத்தியசாலைகளில் சேவைகளைப் பேணுகின்ற அதேவேளை, தனியார் வைத்திய சிகிச்சையிலிருந்து விலகியிருக்க விசேட வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், விபத்துக்கள் மற்றும் பிற சத்திரசிகிச்சைகள் மற்றும் அவசர தேவைகள் போன்ற உண்மையான தேவைகளுக்காக ஏற்கனவே தனியார் துறையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் சிகிச்சையில் விசேட வைத்தியர் சங்க உறுப்பினர்கள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி ஆட்சிக்கு வழிவகுக்கும் தற்போதைய நிர்வாகத்தை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக நாடுமுழுவதும் மேற்கொள்ளப்படும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விசேட வைத்தியர் சங்க தெரிவிக்கின்றது.

மேலும், இந்த நடவடிக்கையால் தனியார் மருத்துவம் பார்க்கின்ற வைத்தியர்கள் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட தடைகள் இருந்தபோதிலும் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களைக் கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


கருத்துகள்