புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இதில் தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாக்களிப்பதற்காக இன்று நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

சமன்பிரிய ஹேரத் வைத்தியசாலையிலிருந்து சேலைன் பொருத்தப்பட்ட நிலையில் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.