ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் வெற்றியீட்டியுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளைய தினம் (21) இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
பாராளுமன்றத்தில் இப்பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வை, பாராளுமன்ற அபைக்கு வௌியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.
கருத்துரையிடுக