திருகோணமலை – கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 59 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவரே இன்று (22) முற்பகல் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக