ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 வீதத்தினை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முதலீட்டில் 250 அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச விளக்கமளித்தார்.
எனினும், அவருடைய பதில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதுடன் பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
கருத்துரையிடுக