நாட்டிலுள்ள பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான 3884 பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அவசியமில்லை என்பதனால் கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்ததை தொடர்ந்து குறித்த 3884 பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக