நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் கஹட்டோவிட்ட வட்டாரத்திலுள்ள பாதைகளை தனது பொறுப்பிலும் மேற்பார்வையிலும் அபிவிருத்தி செய்வதற்காக ரூ.40 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச சபையின் கஹட்டோவிட்ட வட்டார பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீன் JP தெரிவித்தார்.
குறித்த நிதியானது கஹட்டோவிட்ட, கஹட்டோவிட்ட மேற்கு, ஓகொடபொல, குரவலான மற்றும் அறுப்பஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வீதிகளின் அபிவிருத்திக்காக பகிரப்படவேண்டும்.
369 ஏ கஹட்டோவிட்ட
மதனி ஹாஜியார் மாவத்தை
காமிலா டீசர் வீட்டு பாதை
5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபா
369 கஹட்டோவிட்ட
தாஸீம் மௌளவி வீட்டு பள்ளம் 3 லட்சம்
ஜிப்ரி ஹாஜியார் வீட்டு பாதை 3லட்சம்
மோடவத்தை முடிவடையும் பாதை 4லட்சம் ரூபா மொத்தம் 10 லட்சம்
368 A குரவலான பிரிவு
ஹிஜ்ராபுர பதை 5 லட்சம் ரூ பா
மாளிகாவத்தை பாதை 5லட்சம் ரூ பா
ஆக 10 லட்சம் ரூபா
ஓகொடபொல
முனாஸ் வீட்டு முன்பாதை 5 .லட்சம்
நபாயிஸ் வீட்டு பாதை
5 லட்சம் ரூபா
சில சமயம் அறுப்பஸ்ஸ கிராம சேவகர் பிரிவுக்கும் கொடுக்க வேண்டி வந்தால் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் துரித தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தொழிலின்மையையும் வறுமையையும் குறைப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் விஷேட முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
கருத்துரையிடுக