(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் மாவட்டங்களுக்குள் நடமாடுவதற்கு ஊரடங்கு சட்டத்தின் போது பயன்படுத்தும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் நாளைமறுதினம் முதல் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிவுள்ள வேட்பாளரான ஓஷல ஹேரத் தனக்கான ஊரடங்கு அனுமதிபத்திரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு பரிந்துரைக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக