இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள போதுமான சிந்தனையில்லாத இல்லாத மூளை இல்லாதவர்களுக்கு, இதை விளங்கும் படியாக இவ்வாறு முன்வைப்போம்.

தொற்று நோய்களுக்கான உலகளாவிய செயற்பாடு (Global Response to Infectious Diseases (GRID Index 2020) ) இன் அடிப்படையில் இலங்கை 9 வது இடத்தில் உள்ளது என CMA Australia (Certified Management Accountants) இனால் அறிக்கை வெளியிடப்பட்டது.

அறிக்கை இங்கே (ஏப்ரல் 14, 2020): https://www.cmawebline.org/ontarget/grid-index-tracking-the-global-leadership-response-in-the-covid-19-crisis/

அந்த குறியீட்டை (INDEX ) உருவாக்க அவர்கள் பயன்படுத்திய ஆதாரங்களின் பட்டியல் கீழே உள்ளது.

அதிலுள்ள விபரங்களின் அடிப்படையில் அவர்கள் இலங்கையைப் பற்றிய தகவல்களை இங்கிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிகின்றது.
https://healthreviewglobal.com/sri-lanka-coronavirus-update-setting-a-global-example/

இந்த healthreviewglobal.com வலைத்தளம் தொடங்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த டொமைன் மார்ச் 19, 2020 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், CMA Australia இன் இலங்கைக் கிளையின் தலைவர் ஒரு பக்தியுள்ள ராஜபக்ஷ ஆதரவாளரும், கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பாளருமான நலகா கோதஹேவா ஆவார்.
ஆதாரம்: http://www.ft.lk/ft-education/ICMA--Australia--Sri-Lanka-Branch-hosts-2018-Graduation-Ceremony/10515-667372

இணையத்தில் (GRID Index 2020) என தேடும்போது, இரண்டு முடிவுகளே வரும்.
ஒன்று மேலே உள்ள அறிக்கைக்கான இணைப்பு.
மற்றையது டெரானா மீடியா நெட்வொர்க்கின் வலைத்தளமான “தி மார்னிங்” நியூஸ் உரிமையாளரான திலித் ஜெயவீராவின் கட்டுரை: - http://www.themorning.lk/sl-ranked-9th-in-global-response-to-infectious-diseases-grid-index/

உலகில் யாரும் கேள்விப்படாத GRID Index என்ற அறிக்கை ஆஸ்திரேலியாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு முன் டெரானாவின் "தி மார்னிங்" தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. அதைப் பற்றி இவர்களுக்கு இவ்வளவு விரைவாக எப்படித் தெரியவந்தது என அனுமானிக்க முடியாதுள்ளது .

ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் 16 வது இடத்தில் இலங்கையை தெரிவு செய்துள்ள FORBES அமைப்பினது அறிக்கையினை (ஏப்ரல் 13, 2020) பார்க்க விரும்புவோர் இங்கு பார்க்கவும்.:
https://www.forbes.com/sites/cognitiveworld/2020/04/13/covid-19-complexity-demands-sophisticated-analytics-deep-analysis-of-global-pandemic-data-reveals-important-insights/

அவர்களது தேவை என்னவென்றால், கொரோனாவைப் பற்றிய மக்களின் மனங்களில் உள்ள பயத்தை அகற்றி, இலங்கை பாதுகாப்பாக உள்ளதாக தவறான அறிக்கைகளை உருவாக்கி அதன் மூலம் ஊரடங்கு உத்தரவை நீக்கி, ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றாவது  2/3 பெரும்பான்மையைப் பெறுவதே.

Azeem Jahfer
மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிவு

கருத்துரையிடுக

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.