மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் பிரதிவாதியாக தேர்தல்கள் திணைக்களம், தேர்தல் ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் என்று கூறிக்கொண்டு தேர்தலை தற்போதைய அரசாங்க பிற்போடுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன் இதனால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துரையிடுக