➡️ நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறைப்படி அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபையின் அங்கீகாரம்...
➡️ திட்டம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது…
➡️ அபிவிருத்தித் திட்டத்திற்கு பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர;  சங்கம், பாடசாலை முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கீகாரம்.
➡️ கம்பஹா மாவட்டத்தின் கல்வி வலயத்தின் மினுவாங்கொடையில் உள்ள 3 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது...
➡️ தனி நபர் தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை அபிவிருத்தியை செய்ய முடியாது...
➡️ பாடசாலைகளின் அபிவிருத்தியின் பின்னர், மாகாணத்தின் சுகாதார நிலையத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகின்றது...
                                                   
 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறையாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டது.

பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கு முன்னர் மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் அனுமதி பெறப்பட்டது. 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மேல்மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.


கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளின் கட்டிடங்கள் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த கட்டிடங்களை முழுமையாக புனரமைப்பதற்கு பாடசாலைகளிடமோ அல்லது வலயக் கல்வி அலுவலகங்களிடமோ பணம் இல்லை. எனவே, கட்டிடத்தை ஒரு சிறிய அளவிற்கு தற்காலிகமாக புனரமைப்பது மட்டுமே பெரும்பாலும் அவசியமானதாகும்.

இந்நிலை பற்றி கவனத்தில் எடுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் முறையாக ஆய்வு செய்து அந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்கான திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் நான்கு மாத காலமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று இந்த அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளனர்.
பாடசாலையின் ஆபத்தான கட்டிடங்களை அகற்றி பாடசாலையின் தேவைக்கேற்ப கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா கல்வி கோட்டத்தில் 24 பாடசாலைகளையும் மினுவாங்கொடை கல்வி கோட்டத்தில் 34 பாடசாலைகளையும் இலக்கு வைத்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதன் பின்னர், பாடசாலைகளுக்கு அடிப்படை அபிவிருத்தித் திட்டம் வழங்கப்பட்டு, பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், பழைய மாணவர; சங்கங்கள், பாடசாலை முகாமைத்துவக் குழுக்களுடனான கலந்துரையாடலுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரசு நிறுவனங்களும் அடிப்படை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அது அரசின் தேவையாக மாறியுள்ளது. எனவே, இந்த அபிவிருத்தித் திட்டம் கல்விக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாக, தனியார் துறையின் பங்களிப்பில் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்கும்போது, நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகங்களின் பாடசாலைகளில் இது ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இதனை விரிவுபடுத்தும் உரிமை மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண சபைகளுக்கு உள்ளது. எனவே இத்திட்டத்தை முன்னெடுப்பதில் மாகாண பொறியியல் அலுவலகம், வலயக் கல்வி அலுவலகம், திட்டமிடல் பணிப்பாளர்கள் ஈடுபட வேண்டும்.


மேலும் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்த நமது பாடசாலை – நாமே பாதுகாப்போம். அப்போது பணம் வீணாகாது. அபிவிருத்தி நடவடிக்கைகள் தனி நபர் தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தியை செய்ய முடியாது. இதுவே இந்த அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கல்வி நிலையத்தின் அபிவிருத்தியின் பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் அபிவிருத்திக்காக இவ்வாறான அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மேல்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொகுவிதான, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மகிந்த விதானாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்களான லாவண்யா வீரசூரிய, இந்திகா பாலசூரிய, மினுவாங்கொடை வலயக் கல்வி பணிப்பாளர் கபில ரணராஜா பெரேரா, கம்பஹா வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ஏ பிரேமலால்  உட்பட அதிகாரிகள் குழு கலந்துகொண்டது.

முனீரா அபூபக்கர்                                                                                                                  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.