தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கவும் அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்வரும் 28, 29 மற்றும் 30ம் திகதிகளில் தெல்தோட்டை மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. எனசல்கொல்ல பிறீமியர் லீக் - 2023 என்ற பெயரில் இடம்பெறும் இப்போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
ஒன்றிணைவோம் பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற உள்ள இந்த சுற்றுப் போட்டித் தொடர்பில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
கருத்துரையிடுக