கராத்தே சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண USKU கராத்தே மாணவர்கள் சாதனை....

கடந்த சனிக்கிழமை 04.03.2023 அன்று அநூராதபுர அன்றுவ் குமாரகே உள்ளக விளையாட்டரங்கில் "SHOTOKAN KARATE DO JAPAN SCHOOL " ஆல் நடாத்தப்பட்ட 10வது Open karate Championship -2023 போட்டியில் இலங்கை,இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் பங்குபற்றியிருந்தன.

அந்த வகையில் இலங்கை சார்பாக கிழக்கு மாகாண USKU கராத்தே சங்கத்தின் ஓட்டமாவடி  மற்றும் வாழைச்சேனை SKMS மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆடவருக்கான சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவின் கீழ் பங்குபற்றி எமது பாடசாலை மாணவர்கள்  11 தங்கப்பதக்கங்கள், 06 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 07 வெண்கலப்பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்கள் பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.

இம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிய கிழக்கு மாகாண USKU கராத்தே சங்கத்தின் போதனாசிரியரும் மற்றும் SKMS கராத்தே பாடசாலையின் பணிப்பாளருமான சிஹான் MS.வஹாப்தீன் அவர்களுக்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவால் நினைவுச்சின்னம்  வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

 மேலும் இம் மாணவர்களுக்கு USKU கராத்தே சங்கத்தின் தலைவரும் மற்றும் பிரதம ஆசிரியருமான சிஹான் ZA.RAUF அவர்கள் பாராட்டுக்களையும்,வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.