கல்முனை மாநகர சபை ஊழல் விடயத்தில் ரௌப் ஹக்கீமுக்கு பங்குண்டு இது விடயத்தில் விசாரணையை நீதியாக முன்னெடுக்க வேண்டும்!
கல்முனை மாநகர சபை ஊழல் விசாரணையை நீதியாக முன்னெடுக்க கல்முனை முதல்வர் பிரதி முதல்வர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்..
கல்முனை மாநகரசபை கொள்ளையில் ஹக்கீமுக்கும் அவரது கட்சிக்கும் அக்கட்சியின் ஆட்சிக்கு ஒத்துழைத்த கட்சிகள், சுயேற்சைளுக்கும் பங்குண்டு.
கல்முனை மாநகரசபை நிதி மோசடி சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மௌனமாக இருப்பதில் சந்தேகம். அதே போல் இப்பிரச்சினையை சிவில் அமைப்புக்களால் மட்டும் தீர்க்க முடியாது. சிவில் அமைப்புக்கள் சாதித்தது எதுவும் இல்லை.