ஆசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட இரண்டாவது நாடு இலங்கை: கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய
ஆசியாவிலேயே இலங்கை இரண்டாவது அதிகூடிய மின்சார விலையைக் கொண்டிருப்பதாக எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய குற்றஞ்சாட்டுகிறார்.
அதேநேரம் ஒரு நாடு என்ற வகையில் நெருக்கடியிலிருந்து மீளத் தேவையான வெற்றிகரமான நடவடிக்கைகள் எதுவும் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களிடம் முறையான தீர்வுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், வரலாற்றில் இதற்கு முன்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது அரசியல் அதிகார சபை மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியதாகவும்இ ஆனால் இம்முறை அவ்வாறான குறிப்புகளோ விளக்கங்களோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக