எரிபொருள் விலை குறையும் சாத்தியம்?

எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டு சந்தையில் எரிபொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்ததை விட வேகமாக ரூபாயின் பெறுமதியானது பணவீக்கத்தைக் குறைக்கும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை குறைப்பினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவதால் பணவீக்கம் மேலும் குறையும் என்றார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் எரிவாயு விலையும் குறையும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாயின் உயர்வால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.