சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு
ரூபா 5 இலட்சம் நிதி அன்பளிப்பு

மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை தெற்கு கைத்தொழில் ஊக்குவிப்பு வர்த்தக கூட்டுறவு சங்கத்தினால் ரூபா ஐந்து இலட்சம் பணத்தினை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு (01)  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்று வரும் புதிய அபிவிருத்தி வேலைகளின் நிர்மாணப் பணிகளுக்கு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின்  தலைவர் ஏ. ஹிபத்துல் கரீமின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தொகையை மரைக்காயர் சபை கூட்டத்தின் போது பள்ளிவாசலின், செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் அவர்களிடம் 
கையளித்தனர்.

இதன் போது அச்சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சங்கத்தின் தலைவரும் ஷபாஷ் & அசோசியேட்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.சி.எம்.ஹசீர், செயலாளரும் ரெட் சிலி ஹோட்டல் உரிமையாளருமான எம்.எம்.ஏ.ரஹீம், முன்னாள் தலைவரும் ட்ரிபிள் பைவ் ஹோம் பேர்னிச்சர் உரிமையாளருமான எம்.ஏ.சி.எம். இக்பால், பொருளாளரும் ஸ்டார் பலஸ் உரிமையாளருமான பி.எம்.எம். ஹசீம், சிரேஷ்ட தலைவரும் ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டல்  உரிமையாளருமான ஏ. ஹிபத்துல் கரீம், நளீம் ஸ்டோர் உரிமையாளர் ஏ.எச்.எம். ஹாரூன், அல்-தாபீத் ஜுவல்லரி உரிமையாளர் எம்.எம்.அலி பிரதித் தலைவரும் ஜெமீல் பேர்னிச்சர் ஷோரூம் உரிமையாளருமான ஏ. அப்துல் கபூர், மைக்ரோ ஹார்ட்வெயார் பணிப்பாளர்  ஏ. உதுமான் லெப்பை, பிரதித் தலைவரும் ரெயின்கோ பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளருமான எம்.எம்.ஏ அஸீஸ், மல்டி குயீன்ஸ் ட்ரேடர் உரிமையாளர் எம்.ஐ.எம். பழீல் ஆகியோர் இணைந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளனர்.

இந்த முன்மாதிரியான செயற்பாட்டைச் செய்த இச்சங்கத்தின் தலைவர் உட்பட அதன்  பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் உட்பட செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர், பொருளாளர் ஏ.ஏ. சலீம், பிரதி செயலாளர் எம்.ஐ. நிபாயிஸ் மற்றும் மரைக்காயர் சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது நன்றியை நேரடியாகவும் எழுத்து மூலமும் தெரிவித்துக் கொண்டதோடு, தற்போது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதனால் வசதியுள்ளவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களால் முடியுமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். 

இந்நிகழ்வில் ஏ.ஏ.மஜீட் மரைக்காயர் ரூபா ஐம்பதாயிரம் பணத்தினை பள்ளிவாசல் அபிவிருத்தி வேலைகளுக்கு அன்பளிப்புச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.சி.எம்.பாஹிர் மௌலவியினால் துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.