'லவர்ஸ் லீப்' பகுதிக்கு செல்வோர் கவனமாக செயற்படுங்கள்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

TestingRikas
By -
0
'லவர்ஸ் லீப்' பகுதிக்கு செல்வோர் கவனமாக செயற்படுங்கள்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நுவரெலியா, ஹவா எலியா பகுதியில் அமைந்துள்ள 'லவர்ஸ் லீப்' நீர்வீழ்ச்சியை விடுமுறைக் காலங்களில் பார்வையிடுவதற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த பகுதி அழகாக காட்சியளிக்கும் அதேநேரம் அருவியை அண்மித்த பகுதி மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

எனவே நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அருவியின் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதி மிகவும் ஆபத்தானதாக இருப்பதால், அருவியின் தொடக்க பகுதியான மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியினை பார்வையிட வரும் மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)