அக்கரைப்பற்று நீதிமன்ற தீ; தீ வைத்த மூவர் கைது !
அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக ஆவண காப்பகத்திற்கு தீ வைத்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார், சந்தேகநபர்கள் மற்றுமொருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த வளாகத்திற்கு தீ வைத்துள்ளதாக அனுமானிக்க முடியும் என்றார்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (29) அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அக்கரைப்பற்று, பெரிய - நிலா - வெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகளில் பதுங்கியிருந்த சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றைய சந்தேக நபர் அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.