காதலியின் இறுதி கிரியையின் போது தாலி கட்டிய காதலன்; மட்டக்களப்பில் அதிர வைத்த சம்பவம்!
காதலி திடீர் மரணமடைந்த காரணத்தினால் அவருடைய இறுதிகிரியையின் போது காதலன் தாலி கட்டிய செயலை கண்டு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.
சுமார் 10வருட காலமாக 22வயதுடைய அப் பெண்ணும் இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண் கடந்த 29.12.2022 அன்று திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் உயிரிழந்த தனது காதலிக்கு தாலி கட்டி அவரை சுமங்கலியாக வழியனுப்பிவைத்துள்ளார்.
குறித்த இளைஞனின் இச் செயலானது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.