பாடசாலை மாணவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மிருகக் காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் விசேட நிகழ்வு மற்றும் கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் 72 வகையான பாலூட்டிகள், 65 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 89 வகையான மீன்கள் மற்றும் 30 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன.
பறவைகள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்க எண்ணிக்கை சுதந்திரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.