உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டு இல்லை
உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்படவுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக