5,000 போதை மாத்திரைகளுடன் 19வயது இளைஞன் கைது

TestingRikas
By -
0
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)