உலகை திரும்பி பார்க்க வைத்த ஜப்பானியர்கள் (FIFA 2022)

TestingRikas
By -
1 minute read
0
உலகை திரும்பி பார்க்க வைத்த ஜப்பானியர்கள்.

இது தான் முதல் தடவை என்றில்லை. ஒரு சர்வதேச நிகழ்வு எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், ஜப்பானியர்கள் இதை சர்வ சாதாரணமாக செய்து விடுகிறார்கள். இது அவர்களின் பழக்கமாக, வழக்கமாக இருக்கிறது.

இதற்கு முன், பிரேசிலில், தென்னாபிரிக்காவில், ரஷ்யாவில் நடைபெற்ற பிபா உலகக் கிண்ண போட்டிகளின் போதும் இதையே அவர்கள் செய்தார்கள். சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் செய்தார்கள். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஹஜ் கடமைகளிலும் இதை அவர்கள் செய்கிறார்கள். சிறுவயது பழக்கத்தை எங்கு சென்றாலும் விடாமல் கடைப்பிடிக்கிறார்கள்.

இது, பிபா உலகக் கிண்ண துவக்க ஈக்வடார்- கட்டார் போட்டிகளை கண்டுகளிக்க வந்த ஜப்பானியர்கள், மெட்ச் முடிந்ததும் குப்பைகளை சுத்தப்படுத்தும் காட்சி.

தங்களது நாடு விளையாடவுமில்லை. தங்களது நாட்டில் மெட்ச் நடக்கவுமில்லை. இருந்தாலும் ஓரிரு மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருந்த சூழலை கூட எவ்வளவு கவனமெடுத்து சுத்தம் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. 
الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ 
சுத்தம் ஈமானின் பாதியாகும் என்ற நபி மொழியை ப்ரெக்டிகலாக ஜப்பானியர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். 

சூழலை சுத்தமாக வைத்திருக்கும் நற்பண்பை எங்கு சென்றாலும் கைவிடாத ஜப்பானியர்களுக்கு ஒரு ரோயல் சல்யூட் 💐💐💐


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)
Today | 8, April 2025