இந்த வருடத்தின் (2022) இதுவரையான காலப்பகுதியில், 12,373 முறைப்பாடுகள் போலியான முகநூல் மற்றும் முகநூல் ஹேக்கிங் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.
போலி முகநூல் கணக்குகள் தொடர்பான 41 சதவீத முறைப்பாடுகளும், ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகளில் 16 சதவீதமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி முகநூல் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகளை 011-2691692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு சமர்ப்பிக்குமாறும், வாரத்தில் 5 நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் அதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக