நாட்டில் போராட்டத்தின் ஊடாக மற்றுமொரு ஆட்சி மாற்றத்திற்கு இடமளிக்க மாட்டேன் - அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டால் முப்படையினரை களமிறக்குவேன் ; ஜனாதிபதி ரணில்
நாட்டில் போராட்டத்தின் ஊடாக மற்றுமொரு ஆட்சி மாற்றத்திற்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவ்வாறு ஆட்சிமாற்றம் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின், முப்படையினரை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது வன்முறை செயலாகும். அவ்வாறு தீ வைப்பதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள் எனவும் ஜனாதிபதி சபையில் கேள்வி எழுப்பினார்? தீ வைத்தவர்களின் பின்னால் யார் செயற்பட்டார்கள் என்பதை கண்டறிய விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக