வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வரையிலான வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் வட அந்தமான் கடல் பிராந்தியத்துடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டுள்ளது. இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும்.  இந்த தாழ் அமுக்கமானது எதிர்வரும் 20 மற்றும் 21ம் திகதிகளில் இலங்கையின் வட கரையை அண்மித்து வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனபடியினால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று முதல் 21 ம் திகதிவரையில்  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.

குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.